43 வயதாகியும் பார்த்த கண்ணனுக்கு இன்னும் இளமையோடு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக உருவெடுத்தது. இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் , வெளிப்படையாக தாங்கள் காதலிப்பதாக அறிவிக்கவே இல்லை.
இந்நிலையில் தற்போது அதிதி ராவ் ஹைதாரி சித்தார்த் உடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறி சூசகமாக காதலை அறிவித்துள்ளனர். இந்த போட்டோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.