இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும், இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால’ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .
அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில், இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது.
இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக எதையேனும் பதிவிட்டு வரும் அதிதி சங்கரின் அக்கா ஐஸ்வர்யா சங்கர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தநிலையில், அதிதி சங்கர் ஒரு விஷயத்தை கூறி புலம்பி இருக்கும் செய்தி தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பியுடன் ஹோட்டலுக்கு சென்றால், நான் ஆர்டர் செய்யட்டுமா என்று கேட்பேன். ஆனால், அக்கா அப்படி ஏதும் வேண்டாம் என்று கூறிவிடுவாள். எனக்கு பிடித்ததை நான் ஆர்டர் செய்து கொள்வேன்.
பின்னர், சாப்பாடு வந்து சாப்பிடும் போது நான் ஆர்டர் செய்த சாப்பாட்டை எடுத்து என் அக்கா சாப்பிடுவாள். என் அக்கா ஒரு பக்கம் இப்படி என்றால், என் தம்பியும் நான் ஆர்டர் செய்ததை அப்படியே சாப்பிடுவான். இதை பார்த்தால் எனக்கு ஒரே எரிச்சலாக இருக்கும். நான் என்ன பண்ணுவது என்று புலம்பி இருக்கிறார் இந்த சம்பவம் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு முன் ஒரு பேட்டியில் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.