ஆரி பிக்பாஸ் டைட்டில் வின்னருதான் ஆனாரு, வீட்டு வாசலுக்கு வந்த பட வாய்ப்பு!

19 January 2021, 5:52 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன் டைட்டில் வின்னரான நடிகர் ஆரிக்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.


விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை 106 நாட்கள் வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில், ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ, சோமு ஆகிய 5 பேர் இறுதிப் போட்டிக்கு சென்றனர். கடந்த 17 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில், சோமு, ரம்யா பாண்டியன், ரியோ என்று வரிசையாக வெளியேற இறுதியாக பாலா மற்றும் ஆரி இருவருமே இருந்தனர்.

இவர்களின் ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. ஆரி தான் டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவருமே முன்கூட்டியே கூறியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி யாரையும் கைவிடாது என்பதற்கேற்ப, இதற்கு முன்னதாக ஜூலி, ஐஸ்வர்யா தத்தா, கவின், முகென், தர்ஷன் என்று அனைவருக்கும் பட வாய்ப்பு வந்ததைப் போன்று பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கும் அதே போன்று தான். பட வாய்ப்பும் தேடி வந்துள்ளது.

ஆரி வீட்டிற்கு வருவதற்கு முன்னரே பட வாய்ப்பு ரெடியாக இருந்துள்ளது. இயக்குநர் அபின் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆரிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரி வெற்றியுடன் தனது அடுத்த படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளார். ஆம், ஆரி நடிக்கும் படத்தின் பூஜையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரி நடிப்பில் உருவாகியுள்ள அலேகா, பகவான் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0