இளம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

8 February 2021, 3:42 pm
Quick Share

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினிக்காக கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு சீனையும் ரசித்து ரசித்து செதுக்கி இருந்தார். முக்கியமாக இடைவேளைக்கு முன் வரும் ரஜினியின் லுக்குக்கு ரசிகர்களிடம் மாஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது. தங்கள் பழையகால ரஜினியை மீண்டும் கண்முன் கொண்டு வந்தது போல் இருந்தது என உணர்ச்சியில் பொங்கினார்கள் ரசிகர்கள்.

பேட்ட படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா காலகட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொஞ்ச நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. ஆனால் படபிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது மற்றும் ரஜினியின் உடல்நிலை மோசமானதாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது.

இதனிடையே ரஜினியின் அடுத்த படத்தை மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு நடந்தது என்றும் அந்த சந்திப்பில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது கார்த்தி சுப்புராஜ் தான் என்று முடிவானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஓஹோ குஷியில் உள்ளனர்.

Views: - 0

0

0