சூஷாந்த் சிங் பிறகு, சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீரென்று தற்கொலை !

29 September 2020, 12:21 pm
Quick Share

கடைக்குட்டி சிங்கம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா என்று பல நட்சத்திரங்கள் நடித்த மெரினா படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் தென்னரசு என்னும் நடிகர் நடித்திருப்பார். சில படங்களில் நடித்துள்ள அவர் தன் குடும்பத்துடன் சென்னையில் வசிந்து வந்தார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனமுடைந்த அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தென்னரசுவின் மரணம் குறித்து அவரை அறிந்தவர்கள் கூறியிருப்பதாவது, குடும்பம் என்று இருந்தால் அதில் 1000 பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். அதற்காக எல்லாம் தற்கொலை செய்து கொள்வதா? உங்களை நினைத்து குடும்பத்தார் இனி காலம் முழுவதும் கஷ்டப்படுவார்களே.

அவசரத்தில் எடுத்த முடிவு விபரீதமாகிவிட்டது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கிய நிலையில், மறுபக்கம் இப்படி தற்கொலை வேறு நடக்கிறது என்று சினிமா ரசிகர்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர்.

Views: - 8

0

0