பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்திய திரைப்பட இயக்குனர், பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாவார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். மேலும் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி காந்த் திரைப்பட வடிவமைப்பாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வாட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இருகுடும்பத்தினரின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், இவர்கள் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களின் புதிய வீட்டிற்கு குடிபெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் புதிதாக சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார் நடிகர் தனுஷ். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக சேர்ந்து வாழ உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் ஐஸ்வர்யா குறித்து வெளியான இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு போனில் பேசிக் கொண்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.