அழகு என்றால் அவள் தானா..! ‘பர்த்டே பேபி’ ஐஸ்வர்யா ராய் குறித்த சில தகவல்கள்..!

Author: Vignesh
1 November 2022, 3:30 pm
aishwarya rai bachchan -updatenews360
Quick Share

இன்று ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாள். தனது 49 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறு வருகின்றனர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம நாட்டு பொண்ணு தான் ஐஸ்வர்யா ராய். கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா பச்சன் இதை தொடர்ந்து பல மொழி பட வாய்ப்புகளையும் பெற்றார்.

aishwarya rai bachchan -updatenews360

முதல் முதலில் இவர் இருவர் என்னும் படத்தில் தான் நடித்திருந்தார். புஷ்பவல்லி/ கல்பனா என இருவேறு வேடங்களில் தோன்றியிருந்தார் ஐஸ்வர்யா. மணிரத்தினத்தின் இயக்கமான இந்த படம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டிருந்தது. இதில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், ரேவதி, கௌதமி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

aishwarya rai bachchan -updatenews360

இதை தொடர்ந்து ஜீன்ஸிலும் இரட்டை வேடங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். மதுமிதா / வைஷ்ணவி என இரண்டு வேடங்களில் வந்து ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருந்தார். பின்னாள்களில் தமிழை விட பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலேயே அதிகமாக வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல விருதுகளையும் வென்றெடுத்தார் ஐஸ்வர்யா ராய்.

மீண்டும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மூலம் தமிழ் உலகிற்கு திரும்பி வந்த இவர் பாலிவுட் பக்கம் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அதோடு ஹாலிவுட்டிற்கு சென்ற இவர் அங்கும் சில படங்களில் தோன்றியுள்ளார்.

aishwarya rai bachchan -updatenews360

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் ஆகிய படங்களை ஒரே ஆண்டில் நடித்து முடித்தார். இந்த இரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பாராட்டுக்குள்ளானது.

இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி / மந்தாகினி தேவி என்னும் இரு வேறு வேதங்கள் தரித்த தனது நடிப்பின் முத்திரையை பதித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

aishwarya rai bachchan -updatenews360

இவரது நடிப்பு வெகுவாகவே பாராட்டுக்குள்ளானது. அதோடு இந்த கதையின் மையப்புள்ளியே இவரை சுற்றித்தான் செல்கிறது. இதனால் இரண்டாம் பாகத்தில் நந்தினியும்/ மந்தாகினியும் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முன்னணி நடிகையாக இருந்த பொழுதே அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு காதல் கரம் பிடித்தார் ஐஸ்வர்யா ராய். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.திருமணத்திற்கு பிறகு படங்களிலிருந்து சற்று ஒதுங்கிய இருந்த ஐஸ்வர்யா ராயின் ரீ – என்ட்ரி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

aishwarya rai bachchan -updatenews360

சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாள். தனது 49 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறு வருகின்றனர்.

aishwarya rai bachchan -updatenews360

Views: - 243

0

0