மார்டன் உடைகளிலும் கச்சிதமாய் பொருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

25 March 2020, 10:32 pm
Quick Share

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் 27 வயதினை எட்டியிருக்கிறார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பிகாம் முடித்த இவர், சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இந்தத் துறைக்கு வந்திருக்கிறார். இவரது சகோதரர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியலில் நடத்து வருகிறார். இவருக்கு பாடல் நடனம் போன்றவை மிகவும் பிடித்த விஷயங்கள் ஆகும்.

2011 ல் தொடங்கிய இவரது சினிமா பயணம் பல போராட்டங்களுக்குப் பிறகு காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் மிக சிறந்த பாடகரும் கூட. தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் பாடி இருக்கிறார். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சமூக வலைத்தளங்களில் மாடன் ஆடைகளில் ரசிகர்களுக்கு காட்சி தருகிறார். அவரின் சில மாடர்ன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக.