“அது வேற வாய், இது நார வாய்” – ஒரு போட்டோவில் வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! விளாசும் ரசிகர்கள் !

17 November 2020, 8:17 pm
Quick Share

என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். அண்மையில் இவர் “ஹிந்தி தெரியாது போடா” என்கிற T-shirt ஒன்றை அணிந்து அந்த புகைபடத்தை வெளியிட்டு சில தரப்பிடம் இருந்து நற்பெயரும், சில தரப்பினரிடம் இருந்து கெட்ட பெயரும் வாங்கினார்.

தற்போது அது பக்கா எதிர்மாறாக, ‘Green IndiaChallenge’ என்று மரம் நடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அட இது நல்ல விஷயம் தானே என்று நினைக்கும் அப்பாவி உள்ளங்களுக்கு, Caption-இல் HarahaiTohBahraHai என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” எம்மா ஐஸ்வர்யா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான மா ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் போட்ட அதுக்குள்ள என்ன மா இதுHarihaitohbharahai நா என்ன மா?? இப்டி எல்லாம் உருட்டலாமா சொல்லு” என்று வெச்சு செய்கிறார்கள்.