அட்டகத்தி தினேஷ் லவ் லெட்டர் கொடுத்தது இந்த பிரபல நடிகையின் அண்ணிக்கா ? ஆச்சரிய தகவல்…!

7 August 2020, 6:22 pm
Quick Share

2012 ஆம் ஆண்டில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படம் மூலம் தினேஷ் ஹீரோவாக அறிமுகமானார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தின் ஒரு காமெடி காட்சியில் திவ்யா, நதியா என்று இரண்டு அக்கா தங்கை நடித்திருப்பார்கள். அதில் திவ்யாவாக நடித்த நடிகை வேறு யாரும் இல்லை, இதே படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணி தான் அவர்

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு இரண்டு அண்ணன்கள், அதில் ஒருவர் சிறு வயதிலியே இறந்து விட்டார். அறிந்திருந்தாலும் மற்றொரு சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து வருகிறார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி தான் அட்டகத்தி படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா. இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இது தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் டான்ஸ் மாஸ்டர் ஆக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Views: - 19

0

0