சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கோலங்கள் என்ற தொடரில் நடிக்க மிகப்பெரிய பிரபலத்தை அவருக்கு கொடுத்தது.
விக்ரம் மற்றும் தேவயானியை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கியபோது, அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது அதிக காதல் ஏற்பட்டதாகவும், ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம் என தேவயாணி தெரிவித்து உள்ளார்.
அதன்பிறகு தேவயானி குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். ஆனால் தற்போது வரை தேவயானியின் தம்பி நகுல் ராஜகுமாரனிடம் பேசியதே கிடையாது என்றும், அதுமட்டுமல்லாமல் நகுல் தேச விரோதியைப் பார்ப்பதைப் போல ராஜகுமாரனை வெறியோடு பார்ப்பதாகவும், மேலும், தேவயானி குடும்பத்தில் யாரும் தன்னிடம் பேசுவதில்லை என ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும், லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரம பள்ளியில் நகுல் படித்ததாகவும், ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய நண்பர்கள் என்றும், தேவயானி திருமணத்தின் போது, அவர்கள் நகுலை கிண்டல் செய்திருக்க கூடும். சிறிய பையன் என்பதால் அதனை அவமானமாக எண்ணி இன்னும் என்னிடம் பேசாமல் இருக்கக்கூடும் என்று ராஜகுமாரன் தனது யூகத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.