தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முக்கியமாக பார்க்கப்படுபவர்கள். அவர்கள் அவர்களின் ஆசை நாயகனுக்காக செய்யும் விஷயங்களை பார்த்து தான் மற்ற பிரபலங்களின் ரசிகர்களும் செய் வருகிறார்கள். முன்னதாக எம்ஜிஆர், சிவாஜி ரஜினி, கமலுக்கு அடுத்து தொடர்ந்து வருவது அஜித் விஜய் ரசிகர்களின் சண்டைதான்.
எந்த பிரபலங்களின் ரசிகர்களும் போடாத சண்டை எல்லாம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் நடந்துவிட்டது. ஒரு காலகட்டத்தில் சமூக வலைதளம் பயன்படுத்தும் அனைவருமே இந்த ரசிகர்களின் நாயகர்கள் இவர்களுக்கு ஏதாவது கூறலாமே கண்டுகொள்ளலாமே என புலம்பியுள்ளனர்.
அந்த அளவிற்கு இவர்களின் சண்டை ஒரு காலத்தில் பயங்கர பிரச்சினையாகவே சமூக வலைதளங்களில் மாறி இருந்தது. ஆனால், இப்போது புயல் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கும் இவர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்தார்கள். ஆனாலும், இவர்களுக்குள் சில சண்டைகளும் வரத்தான் செய்கிறது. இவர்கள், தனித்தனியாக படங்களில் நடித்தாலே படம் செம மாஸாக இருக்கும் ஒன்றாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற கனவு ரசிகர்களிடம் உள்ளது.
ஆனால், இந்நிலையில் விஜய் அரசியல் வருகை குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில், விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான் என்று பல பெயர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இப்படி இருக்க விரைவில் நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், இதற்கும் அஜித்திற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்க தோன்றுகிறது. அதாவது, விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகிறதே, அதே நாளில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட பட குழுவும் திட்டமிட்டு வருவதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குண்டை தூக்கி போட்டு உள்ளார். அதாவது, விஜய்யின் அரசியல் பேச்சு காட்டுத்தைப் போல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அதை தண்ணீர் ஊற்றி அணைப்பதாக விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பது போல் அந்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, வெளிவந்த தகவலின் படி விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென தற்போது இப்படி ஒரு செய்தியை அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதனை என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.