தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை பலரும் ஆஹா ஓஹோன்னு என்று புகழ் பேசி தான் நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அஜித்தை குறித்து அடுக்கடுக்கான புகார் கூறி பேரதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
தமிழில் கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு, வித்தகன் போன்ற படங்களை தயாரித்தவர் தான் மாணிக்கம் நாராயணன். இவர் தற்போது அஜித் குமார் என்று ஒரு நடிகர் இருக்காரு, அவருக்கு நடிக்கவே தெரியாது ஆனால், வாழ்க்கையில் நல்லா நடிப்பாரு என விமர்சித்து பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் மகிழ்திருமேனி பற்றி பேசிய அவர், அவரை பற்றி உண்மை அனைத்தையும் சொல்ல முடியாது. அவர் எனக்கு பண்ணதுக்கு எந்த கமெண்ட்டும் அடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து இப்படி பேசுவது இது முதன் முறை அல்ல, இவர் ஏற்கனவே 2021ம் ஆண்டு அஜித் என்னிடம் என்னுடைய அப்பா அம்மா சிங்கப்பூர் போக வேண்டும் என சொல்லி கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் கடனாக வாங்கிவிட்டு ஏமாற்றினார். அந்த பணத்தை கேட்டபோது உங்க தயாரிப்பில் நடித்து கொடுக்குறேன் அந்த படத்தை ஈடு செஞ்சிக்கலாம் என்றார்.
பின்னர் அவள் வருவாளா திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன். அதற்காக அஜித்திற்கு ரூ. 12 லட்ச ரூபாயை கொடுத்தேன். ஆக மொத்தம் ரூ. 18 லட்சத்தை வாங்கிவிட்டு என்னை ஏமாற்றைவிட்டார். கேட்டால் நான் உங்களிடம் பணமே வாங்கவில்லை என கூறிவிட்டார்.
நான் ரூ. 2 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரத்தை வைத்திருக்கிறேன். நீ எத்தனை கோடி சம்பாதிக்கிற என் பணத்தை கொடுடா, ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க. எனக்கு நீ படம் பண்ணி தர வேண்டாம்டா என் பணத்தை கொடுடா என்று புலம்பித் தள்ளியிருந்தார்.அப்போவே அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அஜித் குறித்து பேசியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.