தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.
முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மகள் அனுஷ்கா டென்னிஸிலும் ஆத்விக் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது அவர்கள் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இதனிடையே அஜித் தன் மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை நேற்று துபாயில் குடும்பத்தினரோடு கொண்டாடினார். அங்கு சொகுசு Boat ஒன்றில் அஜித் தனது குடும்பத்தினரோடு செல்ல அவரின் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடித்து தல தல என்று கத்தி கூச்சலிட்டனர்.
உடனே அஜித் அவர்களுக்கு கையசைத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியது. மேலும், அஜித் பார்ட்டியில் வெளிநாட்டு ரசிகையுடன் ஆடிய நடன வீடியோவும் இணையத்தில் வைரலாகியது. அதையடுத்து ஷாலினி தனது மகள் அனுஷ்காவின் பிறந்தநாளில் கேக் வெட்டி மகன் ஊட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ” ஹேப்பி பர்த்டே மை பேபி” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளினார்.
இந்நிலையில் துபாயில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய போது ரசிகரின் எல்லைமீறிய செயலால் கடுப்பான அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு அவரின் குடும்ப கொண்டாட்டத்தை வீடியோ எடுத்த ரசிகரின் போனை பிடிங்கி அந்த வீடியோக்களை டெலீட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.