லட்ச கணக்கில் பணம் கொடுத்து வீடு வாங்க உதவிய அஜித் ! வைரலாகும் Cheque புகைப்படம் !

By: Udayachandran
3 October 2020, 4:51 pm
Ajith 1 -Updatenews3602
Quick Share

எந்தவொரு திரைப்பட கலைஞரும், தல அஜித் குமாருடன் பணியாற்றி விட்டால் போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள். அப்படி என்னதான் வசியமருந்து வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், அவர் பணிபுரிந்த இயக்குனர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர் ஒருபோதும் தவறவிடுவதில்லை.

அஜித் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித், பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்களின் இருமலுக்கு வரவில்லை என்று விமர்சனம் செய்யப் பட்டுள்ளார். இருந்தாலும் அவரின் நிறங்கள் தொலைபேசியின் மூலம் எஸ்பிபி மகன் ஆன சரணுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய தகவல் என்னவென்றால், அவரை Train செய்த Gym Masterக்கு 5 லட்சம் மாற்று Gst 10000 கொடுத்து அவரின் அம்மாவின் நகையை மீட்டு கொடுத்தார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் வீடு வாங்குறதுக்கு என் அம்மாவோட நகை அடகு வச்சிருந்தேன், தல அதை கேள்விபட்டு 5 லட்சம் பணம் குடுத்து நகையை மீட்க சொன்னார்.நீ பெரிய ஆளா வருவனு என்ன வாழ்த்தினார்.

அஜித் சார்க்கு சுயமா உழைத்து முன்னேறுறவங்கள ரொம்ப பிடிக்கும்” என அஜித்தை பற்றி சிலாகித்து கூறினார். தவிர அவர் கொடுத்த 5 லட்சத்து பத்தாயிரம் காசோலையை இன்று வெளியிட்டுள்ளார்.

Views: - 79

0

0