இனி ‘தல’ வேண்டாம்…AK என அழைத்தால் போதும்: நடிகர் அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை…ரசிகர்கள் ஷாக்..!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 3:27 pm
Quick Share

தன்னை இனிமேல் யாரும் ‘தல’ என அழைக்க வேண்டாம்…அஜித்குமார் என குறிப்பிட்டால் போதும் என நடிகர் அஜித் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்தின் வலிமை 2022 ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்காக பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. மேலும் ரசிகர்கள் ஆவலுடன் அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

Image

இந்நிலையில், தற்பொழுது நடிகர் அஜித் சார்பில் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில், அஜித் தெரிவித்திருப்பதாவது,

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தீனா படத்தில் இருந்தே தல என கூப்பிட ஆரம்பித்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வலிமையின் இரண்டாவது சிங்கிள் பாடலின் சிறிய ப்ரோமோ டீஸர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 355

0

0