அஜித் குமார் தற்போது பல நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார். தனது அணியுடன் பல பந்தயங்களில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் வென்று சாதனை படைத்து வருகிறார். எனினும் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என்று அவரது ரசிகர்கள் ஏங்கிக்கிடந்தனர். அந்த வகையில் வருகிற நவம்பர் மாதம் முதல் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போவதாக அஜித்குமார் கூறினார்.
அஜித்குமாரின் முந்தைய படமான “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் 64 ஆவது திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக ஓரளவு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் நவம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட உள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தை வேல்ஸ் இன்டெர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக அஜித்குமார் இந்த ஆண்டு நவம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தனது 64 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளப்போகிறாராம் அஜித்குமார். இவ்வாறு இடைவெளி விட்டு விட்டு அஜித்குமார் தனது படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் அஜித்குமார் அதன் பின் எப்போது மீண்டும் சினிமாவுக்கு வருவாரோ? என்று ரசிகர்கள் மீண்டும் ஏங்கத்தொடங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.