பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இன்று வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். ரசிகர்கள் AK63 அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.