வலிமை படத்திற்கு மட்டும் அஜித் வாங்கிய சம்பளம் இத்தன கோடியா..?

Author: Rajesh
19 February 2022, 7:12 pm
Quick Share

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்  நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்   தயாரித்துள்ளார்.  அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

Valimai Ajith Madurai -Updatenews360

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். 

வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  அந்த வகையில், கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வேறமாறி பாடல் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.  இந்நிலையில் வலிமை படத்தில் நடித்ததற்காக அஜித் ரூ.55 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 619

31

4