“அடுத்த சூப்பர்ஸ்டார் யாருனு தெரியாது… ஆனா அடுத்த தல இவர்தான்” – வைரலாகும் அஜித் மகனின் புகைப்படங்கள் !

27 January 2021, 10:13 am
ajith Son - Updatenews360
Quick Share

தற்போது அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஆத்விக் அஜித் தனது அம்மா ஷாலினியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார், அதை ஒரு ரசிகர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இப்போதான் கொழந்தையா பார்த்தா மாதிரி இருக்கு, அதுக்குள்ள வளர்ந்துட்டான், அடுத்த தல இவர்தான் என்று சிலாகித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தற்போது இவர் வலிமை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் சுதா கொங்காரா அல்லது மீண்டும் வினோத் உடன் ஒரு படம் இணைய வாய்ப்பு இருக்கிறது.

Views: - 19

0

0