திரையுலகை பொருத்தவரை எதாவது ஒரு திரைப்படம் வெற்றியடைந்துவிட்டால், அப்படத்தின் 2வது பாகம் அல்லது பிற மொழிகளில் ரீமேக் செய்வது என்பது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் மாஸ் மூலம் இவரது மார்க்கெட் உயர்ந்தது என்றே கூறலாம். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான 2வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதில் இன்னும் ஒரு அசத்தலான தகவல் என்னவென்றால், இந்த 2வது பாகத்தில், பிரபல நடிகரான அஜித்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இத்திரைப்படத்தை, அஜித்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்த விஸ்ணு வரதன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் – விஸ்ணு வரதன் கூட்டணி இணைந்தால் அந்த படத்திற்கு கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். இந்த கூட்டணி உறுதியானால் அஜித்தின் 62வது படத்திற்கு பிறகு, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.