First Look கூட Release ஆகல, ஆனாலும் Record-U ! இந்திய அளவில் வலிமை படைத்த சாதனை !

9 July 2021, 8:18 pm
Quick Share

ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு ஆக்‌ஷன் காட்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது. பைக் ஸ்டண்ட் காட்சிக்கு படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

வலிமை படத்தைப்பற்றி தலைப்பைத் தவிர எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள் அரசியல்வாதிகள் விளையாட்டு வீரர்கள் என கண்ணில் படும் எல்லோரிடமும் வலிமை பட அப்டேட் கேட்டு வருகின்றனர். கோவையில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் தான் ஜெயித்தால் வலிமை மை படத்தின் அப்டேட் வாங்கி தருவதாக வாக்குறுதி தரும் அளவிற்கு ரசிகர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

நேற்று கூட யூரோப்பில் நடக்கும் யூரோ டென்னிஸ் தொடரில் ரசிகர் ஒருவர் வலிமை பட அப்டேட் கேட்டு பதாகை காட்டியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வந்தது. இதற்கு ஒரு endயே இல்லையா என நெட்டிசன்கள் கமென்ட் அடித்து வருகின்ற நிலையில், தற்போது, First Look வெளியாகாத நிலையில், Book My Show App-இல் 1.7 million நபர்கள் இந்த படத்தை காண ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை இந்திய அளவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Views: - 218

8

0