விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!

Author: Selvan
18 January 2025, 10:09 pm

பத்திக்கிச்சு பாடல் நாளை வெளியீடு

நடிகர் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

படம் பொங்கல் அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது படம் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க: அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!

சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரைலர் ஹாலிவுட் தரத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.இந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடலான PATHIKICHU பாடலை நாளை காலை 10.45மணிக்கு வெளியாகும் என படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

ஏற்கனவே படத்தின் முதல் பாடலான SAWADIKA பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய நிலையில்,தற்போது PATHIKICHU பாடல் குறித்த வைப் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.இதனால் ரசிகர்களுக்கு நாளை ஒரு தரமான பொங்கல் கொண்டாட்டம் காத்திருக்கிறது.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!