“சூப்பரா இருக்கு” பிரபல தெலுகு படத்தின் Teaser-ஐ பார்த்து வியந்த அஜித் !

1 February 2021, 11:32 am
Quick Share

எல்லோருக்கும் தெரியும் தல எப்போதும் வெளியில் தலை காட்டமட்டார் என்பது. அவர் படங்களில் அவரை பற்றி வரும் வசனங்களே அவருக்கு ஏக பொருத்தமாக இருக்கும்தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்கி வர, யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ரிலீஸ் ஆன ” இதே மா கதா” என்னும். தெலுகு படத்தின் டீஸரை பார்த்த அஜித் அந்த படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளார். டீசரை குறித்து அஜித் கூறியது என்ன என்றால், ” என்னுடைய நீண்ட நாள் நண்பர் ராம் பிரசாத் (ஒளிப்பதிவாளர்) இந்த படத்தின் டீஸரை காண்பித்தார். சூப்பரா இருக்கு, இந்த டீஸர் படமாக்கிய விதம் எனக்கு பிடித்துள்ளது தவிர இந்த கதை ஒரு பைக் சாகச கதை என்பதால் எனக்கு ஈஸியாக Connect ஆகியுள்ளது. கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார் அஜித்.

இது குறித்து அந்த படக்குழு அஜித்திற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், “தனது நேரத்தை செலவிட்டு இந்த டீஸரை பார்த்ததற்க்காகவும், பிடித்து போய் எங்களுக்கு ஃபோன் செய்து பாராட்டியதற்காகவும் நன்றி” இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமாகி வருகிறார்கள். இத்தன வருஷத்துல தல அஜித் இப்படி பேசி பார்த்தது இல்லை என்று வியந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Views: - 0

0

0