மீண்டும் பழைய பாணியை கையில் எடுக்கும் அஜித்? துணிவோடு ஏகே செய்யும் காரியம்.. அதகளப்படுத்தும் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2022, 6:04 pm
Ajith - Updatenews360
Quick Share

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். வினோத்துடன் மீண்டும் அஜித் இணைந்திருக்கும் படத்திற்கு துணிவு என படக்குழு டைட்டிலை வெளியிட்டனர்.

க்ரைம் சப்ஜெக்ட்டை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் துணிவு தங்களை ஏமாற்றாது எனவும், க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான டீட்டெயிலிங்கிலும் வினோத் அட்டகாசம் செய்பவர் என்பதால் இந்தப் படம் நிச்சய்ம் ஹிட் அடிக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

மேலும், படம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு நடந்த வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

தீரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது போல துணவு படமும் எடுக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமையும் என்பதால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர்.

துணிவு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

துணிவு படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துகொண்டு 10 வருடங்களுக்கும் மேலாகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்றார். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள் என பகிரங்கமாக மேடையிலேயே கருணாநிதியிடம் முறையிட்டது நினைவுகூரத்தக்கது.

அதனால் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் நிச்சயம் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். ஒரு வேளை அவர் பங்கேற்றார் என்றால் அஜித் ரசிகர்கள் போல் மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

Views: - 175

0

0