அஜித்தின் வில்லன் பட சிறுவர்களா இது? 21 ஆண்டுக்கு பின் வெளியான புகைப்படம் – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் வில்லன். அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் சிறுவயது அஜித்தாக இரட்டை குழந்தைகள் தினேஷ் ஷா , நரேஷ் ஷா என இரண்டு பேர் நடித்திருந்தனர். நடிகை மீனா , கிரண் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அஜித்தின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்று இப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால் ஒரு வித சுவாரஸ்யத்தை கொடுக்கும்.

இந்நிலையில் இப்படத்தில் குட்டி அஜித்தாக நடித்த இரட்டை சிறுவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசினார்கள். அப்போது ” நாங்கள் அஜித் சாருடன் நடித்தது லைஃப் லாங் மெமோரி. அப்போ எல்லாம் போன் கிடையாது அவருடன் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டோம். அப்புறம் ஆட்டோகிராஃப் வாங்கினோம். அது ரெண்டுமே எங்க வீட்ல நாங்க பிரேம் போட்டு வச்சிருக்கோம்.

ஒரு காட்சியில் வில்லன்கள் விஷ்ணுவை அடித்து காலை உடைத்து விடுவார்கள். அப்போது அவனை பார்த்து நான் அழவேண்டும். ஆனால் எனக்கு அழுகையே வரல. இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் எனக்கு அழகையே வரல. ஒரு கட்டத்தில் இயக்குனர் என் கன்னத்தில் மூன்று அறைவிட்டார். பயங்கரமாக வலித்தது. நான் அப்போகூட அழல. எல்லோரு முன்னாடியும் அழுதா அசிங்கமா இருக்கும் என அழவே இல்லை. பின்னர் எப்படியோ அந்த காட்சியில் சிறப்பாக நடித்து கொடுத்தேன்.

அதன் பின்னர் இயக்குனர் என்னிடம் வந்து நீ நன்றாக அழவேண்டும் என்பதற்காக தான் அடித்துவிட்டேன் மன்னித்துவிடுப்பா என கூறினார். அத அவர் சொன்ன பிறகு பயங்கரமா தேம்பி தேம்பி அழுதுட்டேன். படம் வெளியாகி 21 வருஷம் ஆச்சு எங்களுக்கு இன்னும் ஒரு நல்ல அடையாளம் இருக்கு அது மிகப்பெரிய பாக்கியம் தான் என அவர்கள் கூறினார்கள். இந்த பேட்டி மற்றும் அவர்களது சமீபத்திய தோற்றம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ramya Shree

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.