தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன், சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர். ஆம், ரெடின் கிங்ஸ்லி பார்க்கத்தான் ஒரு காமெடி பீஸ் ஆனால், உண்மையில் அவர் பெரிய மூளைக்காரர். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருகிறார். அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்தும் வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை நேற்று முன்தினம் இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. 46 வயது காமெடி நடிகருக்கு இவ்வளவு அழகான மனைவியா? என பலரும் ஆச்சரியப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சங்கீதாவும், ரெடின் கிங்ஸ்லியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், எத்தனை நாள் திருமணத்தை தள்ளிப்போடுவீர்கள் என சங்கீதா கேட்டதால்தான் ரெடின் கிங்ஸ்லி ஒப்புக்கொண்டதாகவும், இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர். ஆம் சங்கீதா முட்டி தெரிய குட்டையான கவர்ச்சி ஆடையணிந்து கிங்ஸ்லியுடன் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில் கிங்ஸ்லி மனைவி சங்கீதா குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் அவருக்கு அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம் சங்கீத 2009ம் ஆண்டு க்ரிஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஷிவ்ஹியா என்ற மகள் பெற்றுக்கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.