” அந்த சுகத்துக்குதான், பெண்களை பயன்படுத்துகிறார்கள் ” ஆண்களை கிழிக்கும் அமலா பால் !

6 February 2021, 11:30 am
Quick Share

பொதுவாகவே பெண்கள் ஆண்களின் மீதும் எதாவது ஒரு விஷயத்தை பற்றி குறை கூறிக் கொண்டிருப்பார்கள். “அவன் லவ் பண்ணும் போது அப்படி இருந்தான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாறிட்டான். லவ் பண்ணும் போது கூடவே இருப்பான். இப்போ இல்ல”. ஆண்களிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவர்களை சுற்றி இருக்கும் பெண்கள் ஆண்களுக்கு இருக்கு ஒன்னு ரெண்டு குறையை மட்டுமே சுட்டிக்காட்டுவார். இந்த நல்ல விஷயங்களை பாராட்டுவது மிகவும் அரிது. ஆண்களும் லேசு பட்டவங்க இல்லை, ஏதாவது ஒரு பொண்ணு அவங்க லவ்வ ஏமாத்திட்டு போனால் எல்லா பெண்களும் அப்படித்தான், பெண்களை நம்பாதே, பொண்ணுங்களே இப்படி தான், அடிடா அவள, என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.

10 மாத ஊரடங்கு காரணமாக தற்போது ஏழு மில்லியன் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் . இதைக் கேள்விப்பட்ட நடிகை அமலாபால், “மனிதர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்கூடமாக பெண்ணின் உடல் அமைந்துவிட்டதோ என்று தோன்றுகின்றது. ஆண்கள் பெண்ணின் வலியில் பங்கேற்பதில்லை. ஆணின் படுக்கை சுகத்திற்கும், அவனுடைய பாலுணர்வுக்கு மட்டுமே பெண் ஒரு பொருளாக்கப்படுகிறாள்.

அதன் விளைவு குறித்து யோசிக்க ஆண் சிறிதும் கவலைப்படவில்லை. ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? இங்கு ‘காதல்’ என்ற வார்த்தை அர்த்தமற்று உள்ளது. கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே பெண் நடத்தப்படுகிறாள்” என அமலாபால் கூறியுள்ளார்.

Views: - 21

0

0