உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் அமரன்.
இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மறைந்த இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் தியாகத்தையும் அவர்கள் நாட்டிற்காக செய்யும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் இதில் அமரக் கதாபாத் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரிலே இது மிக முக்கியமான அழுத்தமான படம் என்று கூறலாம் என ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து மிகவும் எமோஷ்னலாக பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்தார்கள் .
இந்நிலையில் இப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக அவருக்கு மட்டும் ரூ. 6 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டிருக்கிறதாம்.
இதையும் படியுங்கள்: கீர்த்தி சுரேஷா இது? என்னடா பண்ணி வச்சீங்க? “பேபி ஜான்” ட்ரைலர் பார்த்து ரசிகர்கள் ஷாக் !
ஆனால் படம் வெளியாகிய அமரன் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று இருப்பதால் படத்தின் சம்பளத்தை மேலும் இரண்டு மடங்கு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசன் மிகப்பெரிய சப்ரைஸ் ஒன்றை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்காக வைத்திருப்பதாக கூட சமீபத்திய தகவல் நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்திருக்கிறது.
இதனால் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் ராஜ்குமார் பெரியசாமி மிகச் சிறந்த இயக்குனராகவும் பலரது பார்வையிலும் தென்பட்டிருக்கிறார். அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது