விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.
பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ்க்கு பிறகு அமீர் – பாவனி நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய ரோலில் நடித்ததை தொடர்ந்து, ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தனர். தற்போது அமீர் ஒரு படத்தினை இயக்க ஆசைப்பட்டு இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இதனிடையே, இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்தில் பாவனி, மன்சூர் அலி கான் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமீர், தனக்கு இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் ஆகவேண்டி தான் ஆசை எனவும், துணிவு படத்தில் தெரியாம நடித்துவிட்டேன் எனவும், அது ஒரு விபத்து என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அமீர் இப்படி கூறியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்க ஆசை என்று சொல்லி விட்டு தற்போது அப்படியே மாற்றிவிட்டீர்கள் என்று தெரிவித்து கலாய்த்து வருகிறார்கள்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.