AV33 படத்தில் இணைந்த ராட்சசன் பட நடிகை!

5 February 2021, 3:51 pm
Quick Share

அருண் நடிக்கும் AV33 படத்தில் ராட்சசன் படத்தில் நடித்த நடிகை அம்மு அபிராமி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், அய்யா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், வேங்கை, சிங்கம் 2, பூஜை, சிங்கம் 3, சாமி ஸ்கொயர் என்று ஏராளமான ஆக்‌ஷன் படங்களை கொடுத்துள்ளார். இதில், சாமி, அய்யா, தாமிரபரணி, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது 16 ஆவது படமான அருண் விஜய்யின் AV33 படத்தை இயக்குகிறார். இதில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு, ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ், கேஜிஎஃப் புகழ் ராமசந்திர ராஜூ, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில், தனுஷின் அசுரன் படத்தில் நடித்த நடிகை அம்மு அபிராமி இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து அம்மு அபிராமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருண் விஜய் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னதாக, தளபதி விஜய் நடித்த பைரவா படத்தில் கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளார். மேலும், என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடவி என்ற படத்திலும், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் நவரசா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 2

0

0