விருப்பமில்லாமல் ஒரு பொண்ணு கூட.. நிஜ வாழ்க்கையில் Playboy-யாகவே சுற்றி திரிந்த சிம்பு..!(Video)

Author: Vignesh
25 June 2024, 2:34 pm
Simbu - updatenews360
Quick Share

தமிழ் சினிமா நடிகர்களில் 40 வயதை தாண்டியும் கல்யாணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் என்று சொல்லி ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில், ரொம்ப பழைய பீசான பிரேம்ஜிக்கு கூட சில தினங்களுக்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது. இதனால், அடுத்தது சிம்பு மற்றும் விஷால் போன்றவர்கள் எப்ப தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. விஷால், ஒரு பக்கம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் கல்யாணம் நடக்கும் என்று இந்த கேள்விக்கு விடை சொல்லிவிட்டார்.

ஆனால், சிம்பு எந்த கேட்டகிரியில் இருக்கிறார் என்றே தற்போது வரை தெரியவில்லை. அவருடைய, அப்பா டி ராஜேந்தர் மீடியா முன்பு தன் மகனுக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது தனக்கு பெரும் வருத்தத்தை கொடுத்து இருப்பதாகவும் வெளிப்படையாக கூறிவிட்டார். அப்படி, அவருடைய அப்பா வெளிப்படையாக பேசி எந்த ரியாக்ஷனும் தற்போது வரை சிம்புவிடம் இருந்து வரவில்லை.

simbu

தொடர் காதல் தோல்வி அடைந்தால் சிம்பு திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாரா என்ற கேள்விகள் கூட பலரிடையே, எழுந்து வருகிறது. அவ்வப்போது, சிம்பு சில நடிகைகளுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டாலும், எல்லோருக்கும் தெரிந்த உறுதியான காதல் என்றால் அது நயன்தாராவுடன் தான். கிட்டத்தட்ட திருமணம் வரைக்கும் வந்து இந்த காதல் தோல்வி அடைந்தது.

Simbu - updatenews360

பல மேடைகளில் இந்த தோல்வியை பற்றி சிம்புவே வெளிப்படையாகவும் பேசியிருந்தார். அதன் பிறகு, ஹன்சிகாவுடன் குறுகிய கால காதலும் இருந்தது. அந்த காதல் தோல்வி அடைந்த பிறகு தான் சிம்பு ஆன்மீகத்துக்கு போகிறேன் என காவி சட்டை போட்டுக் கொண்டு எல்லாம் போனார். அதன் பிறகு உடல் எடை போட்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ள முடியாமல் மொத்தமாக பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

Simbu - updatenews360

தற்போது இழந்த பெயரை திரும்ப வாங்க மீண்டும் பீனிக்ஸ் பறவையாக சிம்பு களம் இறங்கி தற்போது, அவருக்கு வெற்றியும் கிடைத்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில், நடிகர் சிம்பு அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. அதில், யார் வேண்டுமானாலும் சொல்லலாம் சிம்பு ஒரு பிளேபாய் சிம்புவுக்கு அத்தனை பொண்ணுங்க இருக்காங்க என்று கூறலாம். ஆனால், ஒரு பொண்ணுடைய விருப்பம் இல்லாமல் அந்த பொண்ணை தொட்டது கூட இல்லை இந்த சிலம்பரசன் என்று அவர் வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 73

0

0