நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இவர் சில கவிதைகளையும் எழுதி வெளியிட்டு வந்தார். இந்நிலையில் ஆண்டிரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக வெளிப்படியாக கூறி, அதனால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான ஒரு பிரபலத்துடன் தவறான உறவு வைத்திருந்தேன் எனவும், அந்த நபர் என்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார் என்றும், நான் அப்போது செய்த தவறால், என் வாழ்க்கையே இருண்டு போனது என உருக்கமாக தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர், அதில் இருந்து வெளியே வர பல கவிதைகள் எழுதினேன். ஆதீத மன உளைச்சலுக்கு ஆளான நான், அதில் இருந்து விடுபட ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் இவ்வளவு தகவலை சொன்ன அவர், அந்த நபர் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.
தற்போது ஒருவழியாக அந்த வலியில் இருந்து மீண்டு, வந்து விட்டதாகவும், படப்பிடிப்புகள், பாடல்கள், போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும், மாஸ்டர் படத்தின் மூலம் தான் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள, பிசாசு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில்.. இதை தொடர்ந்து சுமார் 6 படங்களில் கமிட் ஆகி நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். எனினும் இவர் உறவு வைத்திருந்த அந்த நபர் யார் என்பது குறித்த விவாதம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பற்றி எரிந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.