தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தொடர்ந்து தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில், அவர் நடித்துள்ள கா படத்தின் ஆடியோ லான்ச் நடந்துள்ளது. அப்போது, கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு போர்வை போற்ற தயாரிப்பாளர் பாத் டவுளால் சிறப்பித்தார். ஆனால், நடிகை ஆண்ட்ரியா இதை பார்த்து என்ன பாத் டவுல் மாதிரி இருக்கு எனக்கு இது வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும், இயக்குனர் பாக்யராஜ் பேசும் போது இயக்குனர் நாஞ்சில் என்னை ஆண்ட்ரியா பக்கத்தில் உட்கார வைத்தது மகிழ்ச்சி என்றும், நடிகர் சலீம் கோஸ்க்கு ஷாட் முடிந்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் பிடிக்கும் என்று இயக்குனர் சொன்னார்.
அப்படியே எனக்கு ஆண்ட்ரியா அப்படி சொன்னால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன் என்று பாக்கியராஜ் கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஆண்ட்ரியா முகமே மாறி தலையை கீழே தொங்க போட்டுவிட்டார். பாக்கியராஜின் இந்த செயலை பார்த்த பலரும் பெரிய மனுஷன் பண்ற வேலையா இது என்று கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.