உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் கமல் ஹாசன் பெண் வேடமிட்டு ஒரு ரோலில் நடிக்கிறாராம். அந்த ரோல் படத்தின் கதைக்கு மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கமல் ஏற்கனவே அவ்வை ஷண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் லேடி கெட்டப்பில் நடித்திருந்தார். அந்த படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. எனவே இந்தியன் 2 படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும். சங்கர் தரமான சம்பவம் செய்திருப்பார் என யூகிக்கமுடிகிறது. எனவே படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார்.
இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3 வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளிவந்தது. இதனிடையே, இந்தியன் 2 வின் இன்ட்ரோ வீடியோவில் வரும் அனிருத்தின் பின்னணி இசை பலருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அந்த பின்னணி இசையை அவர் காப்பீ அடித்து தான் போட்டுள்ளார் என வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அதாவது, சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜீன்ஸ் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வரும் கொலம்பஸ் கொலம்பஸ் பாடலை காப்பி அடித்து இசையமைத்துள்ளார் என்பது போல் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.