தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”, “ஜெயிலர் 2”, கமல்ஹாசனின் “இந்தியன் 3”, சிவகார்த்திகேயனின் “மதராஸி” போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அனிருத்தும் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின.
இருவரும் அடிக்கடி டேட் செய்து வருகிறார்கள் எனவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அனிருத்தோ அல்லது காவ்யா மாறனோ திருமண விஷயம் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இவர்களின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் இருவரும் இதற்கு மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. ஆதலால் இச்செய்தி உண்மைதான் என பலரும் நம்ப வழி வகுத்தது. இந்த நிலையில்தான் தற்போது அனிருத் தனது திருமணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
காவ்யா மாறனுடன் திருமணம் நடைபெறப்போவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பகிர்ந்துள்ள அனிருத், “எனக்கு திருமணமா? Lol… Chill பண்ணுங்க Guys, தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்” என கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கும் காவ்யா மாறனுக்கு இடையே காதலோ? திருமணமோ? எதுவும் இல்லை என இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.