ஆண்ட்ரியாவை கழட்டிவிட்டு, இந்த பின்னணி பாடகியோடு ஊரு சுற்றும் அனிருத் !

14 September 2020, 12:19 pm
Quick Share

3 படத்திற்கு முன் அனிருத் ஆண்ட்ரியா காதல் தீ பற்றியது. ஆனால் அது அந்த படம் முடிந்ததும் அவர்களின் காதல் முறிந்து விட்டது. அந்த நேரத்தில் இவர்களது நெருக்கமான புகைப்படங்கள் லீக் ஆகி இணையதளத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அனிருத், 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

இவர் விஜய் அஜித் ரஜினி கமல் சூர்யா என எல்லோரிடமும் பணிபுரிந்து விட்டார். தற்போது ஆண்ட்ரியாவை தொடர்ந்து, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலிருந்து செல்லம்மா என்ற பாடல் வெளியானது. அந்த பாடலை பாடிய அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் இந்த ஊரடங்கு நேரத்திலும் ஊர் சுற்றி வருவதாகவும் தகவல்கள் உலவுகிறது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்பது இருவருக்கும் திருமணம் நடந்தால் தான் தெரியும்.

Views: - 10

0

0