செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.
இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.
இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார்.
தற்போது பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒட்டுமொத்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் தற்போது இதில் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்தது முதல் இவர் மீது ரசிகர்களுக்கு கோபம் தான் வருகிறது. அதுவும் bigg boss ultimate நிகழ்ச்சியில் எந்த காட்சியையும் கட்டிங்கோ எடிட்டிங்கோ செய்யாமல் அப்படியே ஒளிபரப்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம். அதே போல விஜய்டிவியில் தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான அபிநய், பாலா, அபிராமி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிகரெட் புகைப்பது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது இதை விட மேலே ஒரு படி சென்றது போல, கேவலமான ஆபாச வார்த்தைகளால் அனிதா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் போட்டியாளர் நிரூப், இந்த பாட்டிலை கொண்டு போய் உள்ளே வை என கூறுகிறார். அதற்கு அனிதா சூ….ல வைப்பாங்க, நா எதுக்கு அந்த பாட்டில வைக்கணும், அது யாரு பாட்டிலோ அவங்கள வைக்க சொல்லு, வந்துரும் வாயில என மிக கேவலமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஆபாசமான அறுவறுத்தக்க வார்த்தைகளை அனிதா பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு நிகழ்ச்சியில் இப்படித்தான் பேச வேண்டும் என்ற வரம்பு உள்ளது. அதுவும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக விளங்கக்கூடிய ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆபாச வார்த்தைகளை பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
தன்னை முற்போக்கு சிந்தனை கொண்டவர் என அடையாளப்படுத்திக்கொண்ட அனிதா கீழ்த்தரமான வார்த்தைகளை பேசியுள்ளது அவர் மீதுள்ள மரியாதையை இன்னும் கொச்சைப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.