ஆரியை கை நீட்டி கன்னா பின்னான்னு கத்தும் அனிதா ! அடேங்கப்பா என்ன இவ்வளவு கோபம் வருது ! அதிர்ச்சி வீடியோ !

Author: Udayaraman
21 December 2020, 3:26 pm
Quick Share

சொந்த நாட்டில், சொந்த வீட்டில் 1008 பஞ்சாயத்துகள் இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில என்ன பஞ்சாயத்து என்று ஆவலாக காத்திருக்கும் மக்களே ஜாஸ்தி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்படும் மாட்னியா என்ற டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட் இடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்றும் அதற்கு இன்னொருவர் பதில் சொல்லவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் ஷிவானி ஆரியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “இந்த வீட்டில் யார் டிமோட்டிவேட் ஆக இருக்கின்றார்கள்?” என என்று கேட்க, அதற்கு ஆரி, “அனிதா தான் விளையாடுவது குறித்து எங்கள் வீட்டில் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை என்றும், என்னுடைய பிரபா என்ன நினைப்பார் என்று தெரியவில்லை” என்று கூற, உடனே அனிதா, “என்னுடைய அம்மா அப்பா பற்றி பேச வேண்டாம்” என்று கூறினார்.

அப்போது ஆரி, “நான் பேசி முடித்தவுடன் நான் என்ன சொல்கிறேன் என்று பொறுமையாக கேட்டு அதுக்கு அப்புறம் பதில் சொல்லு” என்று கூற, அதற்கு அனிதா “அதுவரை Wait பண்ணிட்டுருக்க முடியாது, என்னுடைய கணவர் பற்றி, என்னுடைய அப்பா அம்மாவை பற்றி பேசாதீர்கள்” என்று உரத்த குரலில் கையை நீட்டி ஆவேசமாக கூறுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், “அடேங்கப்பா என்ன இவ்வளவு கோபம் வருது” என்றும், “இந்த வாரம் நீதான்” என்றும் Comment அடிக்கிறார்கள்.

Views: - 67

0

0