“பார்த்து உன் பொண்டாட்டி யார்க்கூடயாவது போய்ட போறா…” – ரசிகரின் மனைவியை கொச்சையாக பேசிய அனிதா சம்பத்..!

12 May 2021, 9:12 pm
Quick Share

முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை,

இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்… ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் நடவடிக்கைகள், குறை கண்டுபிடிக்கும் விதம், சண்டை போடும் விதம், எதுவுமே மக்களுக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் 90 நாட்களுக்கு பிறகே வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் பிக்பாஸ் நான்காம் சீசனில் கலந்துகொண்ட அனிதா சம்பத்தும், இரண்டாம் சீசனில் கலந்துகொண்ட நடிகர் ரியாஸ்கான் மகனான ஷாரிக்குடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

இவர்கள் ஆடிய புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அனிதா. இதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், “கேவலமாய் இல்லையா கண்டவன் கூட நிற்கிறத பெருமையா போட்டுட்டு இருக்க. இதைப் பார்த்துமா உன் புருஷன் உசுரோட இருக்கான்” என கண்டபடி கமெண்ட் அடிக்க,

“உன்னோட பெட்ரூமை பாரு, நீ இன்ஸ்டாகிராமில் என்ன திட்டுற நேரத்தில் உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போயிட போறாங்க” என அந்த ரசிகரின் மனைவியை பற்றி கொச்சையாக பேசியுள்ளார் அனிதா. அனிதாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 327

6

7