பிக்பாஸில் மறைக்கப்பட்ட உண்மைகள் – போட்டு உடைத்த அனிதா சம்பத்

6 January 2021, 12:11 pm
Anitha 1 -Updatenews360
Quick Share

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். இளைஞர்கள் மத்தியில் பேமஸ் ஆனவருக்கு பிக்பாஸ் 4வது சீசனில் வாய்ப்பு தேடி வந்தது. சமீபத்தில் தான் அவருக்கு கல்யாணமும் நடந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பின் அவரது கேம் பிளானால் மக்களின் அபிமானம் பாதிக்கு பாதி ஆனது. அவ்வபோது கத்துவது, ஒழுங்காக விளையாடாமல் இருந்தது ஆகியவை தான் காரணம். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நான் பேசிய பல விஷயங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என அனிதா சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே கஸ்தூரி உட்பட பலர் இதே குற்றச்சாட்டை வைத்திருந்த நிலையில் இவரும் இதே விஷயத்தை சொல்லியிருப்பது சிக்கலை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அனிதா சம்பத் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ” நான் கேப்டனாக இருந்த போது நிறைய தலைப்பு குறித்து பேசினேன். ஆனால் அது எதுவும் ஒளிபரப்பாகவில்லை. மற்றவர்களையும் பேச வைத்தேன். அது என்னென்ன தலைப்பு என்பதை இப்போது சொல்கிறேன். திங்கட்கிழமை குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும், செவ்வாய் திருநங்கை வாழ்க்கை மேம்பாடு குறித்தும், புதன்கிழமை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாறுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயிகள் மற்றும் விவசாயம் பற்றியும், வெள்ளிக்கிழமை விதவைகள் மறுமணம் பற்றிப் பேசினேன். இவற்றில் செவ்வாய்க்கிழமை தலைப்பு குறித்து உங்களிடம் பேசலாம் என இருக்கிறேன். அதற்கு சில தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இதை பிப்ரவரியில் ஆரம்பிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

அனிதா சம்பத்தின் இந்த பதிவுக்கு ஆதரவும் வாழ்த்துக்களும் பெருகி வருகின்றன.

Views: - 75

0

0