ஏழு வயதில் நாயகியாய்… 17ல் வில்லன் நடிகருக்கு 4வது மனைவியாய்.. நம்பி ஏமாந்து போன பிரபல நடிகை…!!

Author: Vignesh
9 November 2022, 6:45 pm
Anju Prabhakar - updatenews360
Quick Share

தனது ஒன்னரை வயதில் மகேந்திரன் கண்ணில் பட்டதால் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் நடிக்க வந்தவர்தான் குழந்தை நட்சத்திரமான அஞ்சு.

தனது ஆறாவது வயதில் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ராதிகாவோடு இணைந்து நடித்திருப்பார் இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த காலகட்டம் அது.

சிறந்த நடிகையாக கேரள அரசால் விருது வாங்கிய இவர் அனைத்து படங்களிலுமே தனது எதார்த்த நடிப்பை காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

Anju Prabhakar - updatenews360

மேலும் அந்த காலகட்டத்திலும் கிசுகிசுக்கள் மற்றும் மீ டூ பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இவரின் படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரங்களில் இவரை இவர் கதவை தட்டுவதும், இவரை தவறாக பேசுவதும் தவறான எண்ணத்தில் கூப்பிடுவதும் என்று பல இன்னல்களுக்கு ஆளான இவருக்கு துணையாக இவரது அப்பாவும் இரண்டு அண்ணங்களும் இருந்ததால் சிக்காமல் தப்பித்தார்.

இவர் 17 வது வயதில் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து வந்தார் ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இவருக்கும் அஞ்சுவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் எனினும் தனது வீட்டாருடன் போரிட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

Anju Prabhakar - updatenews360

ஏற்கனவே திருமணம் ஆன பிரபாகருக்கு ஒரு மனைவி ஒரு குழந்தை அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளத்தான் இவர் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன பிறகு அவர் வீட்டில் தன்னை விட அதிக வயதில் மகள்கள் இருந்ததாக கூறப்படுகிறது

பிரபாகரனை நம்பி ஏமாந்த அஞ்சுவுக்கு கடைசியில் தான் தெரியவந்தது பிரபாகரனுக்கு தான் நான்காவது மனைவி என்று இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தவுடன் மூன்றாவது வயதிலேயே இவர் விவாகரத்து பெற்று தனியாக சென்று விட்டார்.

Anju Prabhakar - updatenews360

மேலும் வேறு எந்த திருமணமும் செய்து கொள்ளாமல் தனியாக தன் ஆண் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து விட்டார்.தனது விவாகரத்து கணவர் இறந்ததை டிவியில் பார்த்தபோது தனது குழந்தைக்கு 18 வயது ஆகிறது.

தற்போது அஞ்சுவை அந்த மகன்தான் பார்த்துக் கொள்கிறார்.இவருக்கு சரியான வாழ்க்கை அமையாததன் காரணத்தால் தான் வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி இவர் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது.

Views: - 422

1

0