ரஜினி Audio, அண்ணாத்த படம் பார்த்து ரஜினியை கட்டி பிடித்து கண் கலங்கிய பேரன் !

Author: kavin kumar
28 October 2021, 2:01 pm
Quick Share

ரஜினி அவர்கள் சில நாட்களுக்கு முன் தாதா சாகேப் பால்கே விருது வாங்கினார். அதே நாளில் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் HOOTE என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தினார்.

அதில் ரஜினிகாந்த் அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆடியோ ஒன்றை வெளியிடுகிறார். சில நாட்களுக்கு முன் தான் விருது வாங்கியதற்காக தன் சக தொழில் நுட்பக் கலைஞர்கள் முதல் சினிமாவுக்கு வர உதவிய நண்பர் வரை எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

இப்போது தன் பேரனோடு அண்ணாத்தா படம் பார்த்த அனுபவத்தை மிகவும் சந்தோசமாக, உருக்கமாக, உணர்ச்சிவசப்பட்டு, ஆடியோ ஒன்றை அந்த செயலியில் பகிர்ந்துள்ளார் அந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 470

25

0