தோல்வியடைந்த கோலி அண்ட் கோ: அனுஷ்கா சர்மாவை டுவிட்டரில் வச்சு செஞ்ச ரசிகர்கள்!

19 December 2020, 6:53 pm
Quick Share


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரையும் ரசிகர்கள் டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன் முதல் போட்டி கடந்த 17 ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடந்தது. இதில், முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்கிஸில் 244 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் எடுத்து 53 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மாயங்க் அகர்வால் மற்றும் பும்ரா இருவரும் களத்தில் இருந்தது.

3 ஆம் நாளை தொடங்கிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த புஜாரா (0), விராட் கோலி (4), ரஹானே (0), விஹாரி (8), சகா (4), அஸ்வின் (0) என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். ஷமி ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேற 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸி அணிக்கு 89 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.


இந்த எளிய இலக்கை விரட்டிய ஆஸி அணி 2 விக்கெட் இழந்து 93 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் காரணமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை டுவிட்டரில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.


அனுஷ்கா சர்மாவின் பிரசவ விடுமுறையில் கோலி செல்வதால், அடுத்த 3 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக ரஹானே கேப்டனாக பொறுப்பேற்பார். இந்த நிலையில், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை விமர்சித்துள்ளனர்.

டுவிட்டரில் வந்த விமர்சனங்கள்: கோலிக்காக அனுஷ்கா காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், கோலியால், காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆதலால், சீக்கிரமாகவே அவுட்டாகிவிட்டார்.
உண்மையான கணவன்… மற்றொன்றில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் விமானத்தில் இருந்து இறங்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு டுவீட்டில், சுனில் கவாஸ்கர், தனது குழந்தையின் பிறப்புக்கு தந்தைவழி விடுமுறையை மறுத்தார்.


எம்.எஸ்.தோனியும், தனது குழந்தையின் பிறப்புக்கு தந்தைவழி விடுப்பை மறுத்தார். ஆனால், விராட் கோலி அவ்வாறு செய்யவில்லை. அவர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவரது முன்னுரிமை மாறுபட்டுள்ளது. ஆதலால், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 1

0

0