தனது சினிமா வாழ்க்கையிலேயே முதன் முறையாக “இந்த” நடிகையுடன் இணையும் உலகநாயகன்…!

26 March 2020, 1:17 pm
Quick Share

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது கொரோனாவின் பாதிப்பால் பலவிதமான நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திவருவதால் அவர்நடித்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் வேலைகளிலிருந்து தள்ளி நிற்கிறார். மேலும் இவரது அடுத்த திரைப்படத்தின் செய்திகள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கூறிவருகிறது.


இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இணைந்து பணியாற்றி கடந்த 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”. DCP ராகவன் என்னும் காவல் அதிகாரியின் வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளிவந்த போலீஸ் கதைகளிலேயே மிகவும் சிறந்த படைப்பு.


இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கவுதமும் கமலும் முடிவெடுத்துள்ளனர். இந்த படத்தில் தனது சினிமா வாழ்க்கையிலேயே முதன் முறையாக நடிகை அனுஷ்காவுடன் இணையவுள்ளார். கவுதமுடன் அனுஷ்கா என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுஷ்கா மற்றும் கமலின் பிறந்தநாளும் ஒரே நாளாகும்.

Leave a Reply