“சொன்னதுக்கெல்லாம் OK-னு தலை ஆட்டினேன், சூரரைப் போற்று பட வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல” – போட்டு உடைத்த அபர்ணா முரளி..!

21 November 2020, 9:05 am
Quick Share

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று நேற்று வெளியாகி இன்று வரை மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. தற்போது அந்த எதிர்ப்பார்ப்பை சூப்பராக பூர்த்தி செய்துள்ளார் சுதா.

8 தோட்டாக்கள், ஜி.வி. பிரகாஷின் சர்வம் தாள மயம் என இரண்டு தமிழ் படங்களிலும், ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லையாம்.

அதற்காக ஏகப்பட்ட ஆடிஷன், மற்றும் பயிற்சி வகுப்புகள் என அனைத்து பரிசோதனைகளிலும் பாஸ் ஆன பிறகு தான் சுதா அபர்ணா பாலமுரளியை பொம்மியாக செலக்ட் செய்துள்ளார். “சொன்னதுக்கெல்லாம் OK-னு தலை ஆட்டினேன்” என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி.

Views: - 15

0

0

1 thought on ““சொன்னதுக்கெல்லாம் OK-னு தலை ஆட்டினேன், சூரரைப் போற்று பட வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல” – போட்டு உடைத்த அபர்ணா முரளி..!

Comments are closed.