இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே பெருமையாக நினைக்கும் புகழ்மிக்க நபர். எந்த நிகழ்ச்சியிலும் அமைதி, அடக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, பெரிய பிரபலமாக இருந்தாலும், மக்களுடன் சாதாரணமாக பழகும் தன்மை கொண்டவர்.
சமீபத்தில், 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது மனைவி சாய்ராவுடன் விவாகரத்து செய்யும் முடிவை ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை குறித்த பல விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
விவாகரத்திற்கு பிறகு, ரஹ்மானைப் பற்றிய பல சர்ச்சைகள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன. இதை பார்த்து வருத்தமடைந்த அவரது மகன் ஏஆர் அமீன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
“என் தந்தை ஒரு சாதனையாளர். அவர் இசைத்துறையில் அளித்த பங்களிப்பு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் கடைப்பிடித்த மதிப்புகள், மரியாதை, மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவரைப் பெருமையாக பார்க்கிறேன். அவரைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதை பார்க்க மனமுடைந்து போகிறேன். தயவுசெய்து இத்தகைய தவறான தகவல்களை பகிருவதை நிறுத்துங்கள்,” என்று அமீன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு, ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தினர் இச்சூழ்நிலையில் எதிர்கொள்ளும் வேதனையை வெளிப்படுத்தி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.