“நிஷா போடுற டிரஸ், நிஷா பண்ற விஷயம், எனக்கு பிடிக்கல” நிஷாவின் கணவர் கூறிய பதில் !

13 November 2020, 6:12 pm
Quick Share

கடந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர, சற்று சூடு குறைந்தே காணப்படுகிறது பிக் பாஸ் வீடு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன் தினம் போட்டியாளர்களுக்கு பாட்டி சொல்லை தட்டாதே என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்புறம் அந்த பாத்திரத்தை பாலா திருட, உடனே அந்த டாஸ்க்கை அவசர அவசரமாக முடித்து விட்டார் Big Boss.

பிக்பாஸ் வீட்டில் கொண்டாட போகும் முதல் தீபாவளி என்பதால் போட்டியாளர்கள் சற்று இன்பமாகவே காணப்படுகின்றனர். இந்நிலையில் நிஷாவின் கணவர் ரியாஸ் யூ ட்யூப் சேனல் ஓன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நிஷாவுக்கு இரக்க சுபாவம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமா என்று தான் பயமாக இருக்கிறது.

இது நாள் வரை நிஷா தன் விளையாட்டை விளையாடவில்லை. அவர் இன்னும் ரியோ, ரமேஷ், அர்ச்சனா, சோமுடன் சேர்ந்து, தனகான அடையாளத்தை காண்பிக்காமல் இருப்பது எனக்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் அவரை அடிக்கடி நைட்டி அணிய வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர் எப்போதும் நைட்டி அணிவது தான் எனக்கு பிடிக்காத விஷயம் மற்றபடி நிஷா இதுவரை நிஷாவாகவே தான் இருக்கிறார்.

Views: - 25

0

0