இளம் வயதில் சிக்கென இருக்கும் VJ அர்ச்சனா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Author: Udhayakumar Raman
29 November 2021, 8:19 pm
Quick Share

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்பு கேங் என்று பலர் கலாய்த்து வந்தாலும் அசராமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வை பதிவிட்டு அதன் மூலம் பலரின் கலாய்களுக்கு உள்ளானார். அது வெவ்வேறு பிரச்சினையாக உருமாறி பெரிய இடத்துக்கு வந்து நின்றது. தற்போது அதெல்லாம் தீர்ந்து சுமுகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை, தற்போது மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அறுவை சிகிச்சையில் செய்யப்போவதாக தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு, இப்போது வலி ஒரு வழியாக சரியாகிவிட்டது. அர்ச்சனாவும் அவரது மகளும் யூடியூப் சேனல் மட்டுமில்லாமல் டாக்டர் படத்திலும் இணைந்து நடித்தனர்.

படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் அர்ச்சனாவின் இளமை கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சன் டிவியில் VJ வாக இருந்த நேரத்தில் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Views: - 421

12

0