திவால் ஆன அன்பு Gang..! இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றமா?

Author: Udayaraman
19 December 2020, 3:38 pm
Quick Share

பிக்பாஸ் 4வது சீசனில் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சமே இல்லாதது போல் போய்க்கொண்டிருக்கிறது. 3வது சீசனில் பாய்ஸ் கேங் உருவானது போல இந்த சீசனில் அன்பு கேங் உருவானது. பேருக்கு தான் அன்பு கேங், ஆனா எல்லாம் சண்டையா இருக்கு, பிக்பாஸ் ஆ இல்ல வடசென்னையா தெரியல என மக்கள் சலித்துக்கொள்ளும் அளவு மல்லுக்கட்டிக்கொள்கிறார்கள்.

60 நாட்கள் தாண்டிருச்சு, ஆனா இன்னும் இவ்வளவு பேர் உள்ள இருக்காங்களே என மக்கள் யோசித்துக்கொண்டிருக்க, அடுத்த ஒரே வாரத்தில இரண்டு எலிமினேசன்கள் என குண்டை போட்டார் தொகுப்பாளர் கமல். வெளியான ரமேஷ் மற்றும் நிஷா ஆகிய இருவரும் அன்பு கேங் என்பதால் கேங் உடைய தொடங்கியது.

சரி, சண்டையா பார்த்து பார்த்து போர் அடித்துப் போன பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாட டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதிலும் களேபரங்கள் பரக்க, வழக்கம் போல போர்க்களம் ஆனது. இப்போது இந்த வார இறுதி வந்துவிட்டதால் யார் எலிமினேட் ஆவார் என்ற ஆவலில் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆரி, அர்ச்சனா, ஆஜித், அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் என ஏழு பேர் நாமினேசனில் இருக்கிறார்கள்.

குறைந்த வாக்கு பெற்றுள்ளதால் அர்ச்சனா வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரும் போய்விட்டால் அன்பு கேங் அதோகதி ஆகிவிடும். முன்னதாக அடுத்த வார கேப்டன் யார் என்ற போட்டியில் அர்ச்சனா வெற்றி பெற்றதால் அவர் வெளியேற்றப்படுவாரா அல்லது தொடர்வார என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 76

0

0